மக்களின் கருத்துகளை பதிவு செய்ய தமிழக அரசு தரப்பில் https://tamilnadu.mygov.in/ என்ற புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளம் மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான பாலமாக அமையும். தமிழக அரசின் தற்போதைய திட்டங்கள், எதிர்கால திட்டங்கள் குறித்து புதிய இணையதளம் வாயிலாக பொதுமக்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம். இதன்மூலம் அரசு திட்டங்களை மேம்படுத்தவும் மக்களின் தேவைக்கு ஏற்ப புதிய திட்டங்களை உருவாக்கவும் முடியும்.
புதிய இணையதளத்தை முதல்வர் பழனிசாமி கடந்த 28-ம் தேதி தொடங்கிவைத்தார்.