முக்கிய செய்தி துளிகள்

முக்கிய செய்தி துளிகள் சுருக், நறுக்காக தொகுக்கப்பட்டுள்ளது.

மழலையர், தொடக்கப் பள்ளிகள் டிசம்பர் வரை திறக்கப்படாது

தன்னார்வ அடிப்படையில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை திறக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி முதல்கட்டமாக 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் சுழற்சி முறையில் வகுப்புகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மழலையர், தொடக்கப் பள்ளிகள் வரும் டிசம்பர் வரை திறக்கப்படாது என்று தமிழக பள்ளி கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நீட் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப். 13-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு தடை விதிக்கக் கோரி பல்வேறு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்,  திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

பி.எப். நிதிக்கு 8.5% வட்டி

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) தொடர்பான கொள்கை முடிவுகளை எடுக்கும் மத்திய அறக்கட்டளை வாரிய கூட்டம் டெல்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பி.எப். நிதிக்கு 8.5 சதவீத வட்டி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அனைத்து கடைகளிலும் ஏசி பயன்படுத்தலாம்

வகுப்பறைகள், உடற்பயிற்சி கூடம், ஓட்டல்கள், கடைகளில் 24 டிகிரி முதல் 30 டிகிரி வரை ஏசி வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். 

முக்கிய செய்தி துளிகள் அனைத்து கடைகளிலும் ஏசி பயன்படுத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அனைத்து கடைகளிலும் ஏசி பயன்படுத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கட்டுமான பணிகளுக்காக வாகனங்களில் 60 சதவீதம் வரை ஊழியர்களை பணிக்கு அழைத்து செல்லலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் 12.88 லட்சம் மாணவர் சேர்க்கை

தமிழகம் முழுவதும் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12 லட்சத்து 88 ஆயிரம் மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளனர். ஒன்றாம் வகுப்பில் மட்டும் 2.75 மாணவ, மாணவியர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த மாதம் முழுவதும் மாணவர் சேர்க்கை நீடிக்கிறது. இதன்படி மேலும் 4 லட்சம் பேர், அரசு பள்ளிகளில் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்ட்ரல்-பரங்கிமலை இடையே மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்

சென்ட்ரல்- பரங்கிமலை இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் கோரிக்கையை ஏற்று இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் கடுமையான கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வட்டி விகிதம் குறைப்பு

எம்சிஎல்ஆர் உடன் இணைக்கப்பட்ட கடனுக்கான வட்டி விகிதம் 0.1 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட தங்க நகை வேளாண் கடனுக்கான வட்டி விகிதம் 0.6 சதவீதம் குறைக்கப்படுகிறது. 

இந்த வட்டி குறைப்பு செப். 10 முதல் அமலுக்கு வந்துள்ளது என்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்துள்ளது.

முக்கிய செய்தி துளிகள் தொகுப்பு இத்துடன் நிறைவடைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *