மழையால் சான்றிதழ் நனைந்து சேதமடைந்திருந்தால் மாற்று சான்றிதழ் பெற தன்னார்வ குழு வழிகாட்டுகிறது.
மழைக்காலங்களில் சான்றிதழ்கள், முக்கிய ஆவணங்கள் சேதமடைந்தால் அதனை மீட்கவும் நகல் ஆவணங்களை பெறுவது தொடர்பாகவும் ஆலோசனைகளை வழங்க முன்னாள் வருமான வரித் துறை அதிகாரி பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, 20 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை உருவாக்கியுள்ளார்.
இதில் முன்னாள் அரசு ஊழியர்கள் இடம்பெற்றுள்ளனர். பாதிக்கப்பட்ட நபர்கள் certificatesplease@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தகவல் தெரிவிக்கலாம். அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும். வரும் டிச. 31 வரை வழிகாட்டுதல் குழு செயல்படும் என்று பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி அறிவித்துள்ளார்.