நெய்வேலி என்எல்சியில் தீ விபத்து 8 பேர் பலி; 17 பேர் படுகாயம்

தமிழகத்தின் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்எல்சி) செயல்படுகிறது. அங்கு 2-வது அனல் மின் நிலையத்தின் 5-வது யூனிட்டில் இன்று பாய்லர் வெடித்துச் சிதறியது. இதில் 8 பேர் உயிரிழந்தனர். 17-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.


தகவல் அறிந்து தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்து நேரிட்ட 5-வது யூனிட்டில் 150 முதல் 200 ஊழியர்கள் வரை வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

தீ விபத்தில் பலத்த காயமடைந்தவர்
தீ விபத்தில் காயமடைந்தவர்

ரூ.3 லட்சம் நிவாரணம்

அவர்களில் சிலரை காணவில்லை என்று கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
என்எல்சி சுற்றுவட்டார பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சியளிக்கிறது. பலத்த தீக்காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், என்எல்சியில் கொதிகலன் வெடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.3 லட்சம், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *