வாக்குச்சீட்டு முறைக்கு உத்தரவிட ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். ஏற்கெனவே நடைமுறையில் இருந்த வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என்று கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமூர்த்தி அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மீண்டும் வாக்குச்சீட்டு நடைமுறையை அமல்படுத்த முடியாது என்று தலைமை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது.
இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்திருப்பதால் வாக்குச்சீட்டு நடைமுறையை மீண்டும் கொண்டு வர உத்தரவிட முடியாது என்று ஐகோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர்.