விமான சேவை நிறுத்தப்படாது என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை தொடங்கியுள்ளது. தற்போது நாள்தோறும் 60,000-க்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும் வைரஸ் பரவல் காரணமாக 100 சதவீத விமான சேவைகளை இயக்கும் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும் முற்றிலுமாக விமான சேவையை நிறுத்தம் திட்டமில்லை என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.