தமிழக ரேஷன்கார்டுதாரர்களுக்கு பயோ-மெட்ரிக் கட்டாயமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 1-ம் தேதி முதல் ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதன்மூலம் வெளிமாநில மக்கள் தமிழகத்தின் எந்தவொரு ரேஷன் கடையிலும் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.
வெளிமாநிலத்தவர்களுக்கு அரிசி கிலோ ரூ.3, கோதுவை கிலோ ரூ.2-க்கு வழங்கப்படுகிறது.
புதிய திட்டம் தொடர்பாக தமிழக அரசு விரிவான செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது.
“தமிழகத்தைச் சேர்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு தொழில்நுட்ப காரணங்களால் பயோமெட்ரிக் முறையிலான தகவல் உறுதிப்படுத்தலை மேற்கொள்ள இயலவில்லை.
எனவே இப்போது நடைமுறையில் உள்ள ரேஷன் அட்டையை ஸ்கேனிங் செய்யும் முறை பின்பற்றப்பட்டு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் தமிழக ரேஷன்கார்டுதாரர்களுக்கு பயோ-மெட்ரிக் கட்டாயமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.