சென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் இல்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. தற்போது நாள்தோறும் ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுகிறது.
சென்னையில் ஒரு தெருவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அந்த தெரு முழுவதையும் கட்டுப்பாடு மண்டலமாக அறிவிக்கும் திட்டம் அமலில் இருந்தது.
தற்போது ஒரு தெருவில் 5 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அந்த தெரு முழுவதையும் கட்டுப்பாடு மண்டலமாக அறிவிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி தற்போது சென்னை மாநகராட்சியில் நோய் கட்டுப்பாடு பகுதிகள் இல்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.