ஊரடங்கு வதந்திகளை நம்ப வேண்டாம்

ஊரடங்கு வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தமிழக சுகாதாரத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ஊரடங்கு அமல் செய்யப்படலாம் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதனை தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மறுத்துள்ளார்.

“கடந்த காலத்தில் அதிகபட்சமாக ஒரே நாளில் 6,900 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது அந்த எண்ணிக்கை 1,700 ஆக மட்டுமே உள்ளது. எனவே கொரோனா 2-ம் அலை உருவாகிவிட்டதோ என்ற அச்சம் தேவையில்லை. ஒரே தெருவில் 3 பேருக்கு மேல் வைரஸ் தொற்று ஏற்பட்டால் அந்த தெரு கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படும். 

கடந்த ஆண்டு போன்று தெரு அடைக்கப்படாது. கொரோனா பாதித்தவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள். அவர்களுக்கு தேவையான உணவு பொருட்கள் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வழங்கப்படும். தமிழகத்தில் ஊரடங்கு அமல் செய்யப்படும் என்று வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம். பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும்” என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *