பத்திரங்களில் பிழைகளை திருத்த இனிமேல் கட்டணம் வசூலிக்கப்படாது. இதுதொடர்பான அதிகாரபூர்வ அரசாணை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சொத்துகள் கைமாறாத நிலையில் பத்திரங்களில் பிழை திருத்தத்துக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று சில மாதங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பு நகல் தமிழக பதிவுத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதன்படி பத்திர பிழை திருத்தத்துக்கான கட்டண வசூலிப்பை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான அரசாணையை பத்திரப்பதிவு துறை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.