செம்பரம்பாக்கம் ஏரியால் வெள்ள அபாயம் இல்லை என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி உறுதி அளித்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழை நிவாரண பணிகள், வெள்ள தடுப்புப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் சென்னை மாநகராட்சியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், ஆட்சியர், மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்துக்குப் பிறகு உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
“செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவில் 80 சதவீதம் நிரம்பியுள்ளது. ஏரி முழுமையாக நிரம்பினாலும் சென்னைக்கு வெள்ள அபாயம் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.