வணிகர் தின மாநாடு: கடைகளுக்கு நாளை விடுமுறை இல்லை

வணிகர் தினத்தையொட்டி கடைகளுக்கு நாளை விடுமுறை இல்லை. வழக்கம்போல கடைகள் செயல்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மே 5-ம் தேதி புதன்கிழமை வணிகர் தினம் எளிமையாக கொண்டாடப்படுகிறது. அன்று காலை 9 மணிக்கு சென்னை கே.கே.நகர் ராமசாமி தெருவில் வணிக கொடியேற்றும் நிகழ்ச்சியும் மாலை 4 மணிக்கு கோயம்பேடு வணிக வளாகம் அருகில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

பொதுவாக வணிகர் தினத்தில் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம். தற்போதைய ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு, வணிகர்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மே 5-ம் தேதி கடைகள் வழக்கம்போல செயல்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *