தேர்தல் முடியும் வரை போலீஸாருக்கு விடுமுறை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 6-ம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தமிழக போலீஸார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதை கருத்தில் கொண்டு சட்டப்பேரவைத் தேர்தல் முடியும் வரை போலீஸாருக்கான விடுமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவசரம், துக்க நிகழ்ச்சிகளுக்காக மட்டுமே போலீஸார் விடுமுறை எடுக்கலாம் என்று உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.