நாளை முழு ஊரடங்கு கிடையாது

மே 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல் செய்யப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மே 10-ம் தேதி திங்கள்கிழமை முதல் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் செய்யப்படுகிறது.

எனவே வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்கப்படும் முழு ஊரடங்கு மே 9-ம் தேதி அமல் செய்யப்படாது. அன்றைய தினம் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் அனுமதியின்பேரில் சனிக்கிழமையும் அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை செயல்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *