தமிழகத்தில் ஊரடங்குக்கு அவசியமில்லை என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை, கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக கூட்டு குடியிருப்பு பகுதிகளில் வைரஸ் அதிகமாக பரவுகிறது. கடந்த ஆண்டு போதிய மருத்துவ வசதி இல்லாத காரணத்தால் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது.
தற்போது தமிழகத்தில் ஊரடங்கை அமல் செய்ய வேண்டிய அவசியமில்லை. தொற்று அதிகரித்தால் அத்தியவசியமற்ற பணிகளுக்கு மட்டும் படிப்படியாக கட்டுப்பாடு விதிக்கப்படும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் கண்டிப்புடன் பின்பற்றினால் வைரஸ் பரவலை தடுக்க முடியும் என்று தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.