டிஜிட்டல் டிரைவிங் லைசென்ஸ் போதும்

டிஜிட்டல் டிரைவிங் லைசென்ஸ் போதும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

செல்போன் செயலிகளில் டிஜிட்டல் வடிவில் உள்ள டிரைவிங் லைசென்ஸ், வாகன பதிவு சான்று (ஆர்சி), பெர்மிட்டுகள், இன்சூரன்ஸ், மாசுக் கட்டுப்பாட்டு சான்று உள்ளிட்டவற்றை ஏற்குமாறு மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவுறுத்தியிருந்தது.

இதற்கேற்றவாறு மோட்டார் வாகன விதிகளை மத்திய அரசு திருத்தியுள்ளது.

புதிய நடைமுறை கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இனிமேல் டிரைவிங் லைசென்ஸ், ஆர்.சி. புக், இன்சூரன்ஸ் ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

எம்-பரிவாகன் அல்லது டிஜிலாக்கர் செயலிகளில் அவற்றை டிஜிட்டல் வடிவில் சேமித்து வைத்து போக்குவரத்து போலீஸாரிடம் காண்பிக்கலாம்.

புதிய நடைமுறைகளின்படி காகித ஆவணங்களை காட்டுமாறு போக்குவரத்து போலீஸார் வற்புறுத்த முடியாது. அதேநேரம் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி. புக் நகல்களை காண்பித்தால் செல்லாது.

மேலும் சாலை விபத்துகளின்போது உதவ முன்வருபவர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை போலீஸார் கேட்டு வற்புறுத்தக்கூடாது.

விபத்துகளில் சிக்கியவர்களுக்கு உதவுபவர்கள் மீது சிவில், கிரிமினல் வழக்குகளை பதிவு செய்யக் கூடாது. அவர்களை போலீஸார் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று மோட்டார் வாகன சட்ட விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *