124 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட சேரவில்லை

124 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட சேரவில்லை.

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான பி.இ., பி.டெக், பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஒரு லட்சத்து 63 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில் ஒரு லட்சத்து 12 ஆயிரம் மாணவர் விண்ணப்பித்தனர்.இதுவரை மூன்று சுற்று மாணவர் சேர்க்கை முடிந்து 4-வது சுற்று சேர்க்கை நடைபெற உள்ளது. 

தமிழகத்தில் உள்ள 124 கல்லூரிகளில் இதுவரை ஒரு மாணவர்கூட சேரவில்லை. ஒட்டுமொத்தமாக பல்வேறு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை திருப்திகரமாக இல்லை. கல்லூரிகளில் உள்ள படிப்புகளில் பாதி இடங்கள் கூட நிரப்பப்படவில்லை. 22 கல்லூரிகளில் மட்டுமே 75 சதவீத சேர்க்கை நடைபெற்றுள்ளது. முதல் 2 சுற்று சேர்க்கையில் சுமார் 40 சதவீத மாணவர்கள் பங்கேற்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *