சுகாதார பணியாளர்களுக்கு மீண்டும் முன்னுரிமை வழங்கப்படாது என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. தமிழகத்தில் 166 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.
நிர்ணயிக்கப்பட்ட தேதியில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத சுகாதாரப் பணியாளர்களுக்கு மீண்டும் முன்னுரிமை வழங்கப்படாது. எனவே இப்போதே தடுப்பூசியை போட்டுக் கொள்ளுமாறு தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.