மின்சார வாரியம் தனியார்மயமாகாது என்று அத்துறை அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரியம் தனியார்மயமாக்கப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதனை தமிழக அரசு மறுத்துள்ளது. இதுகுறித்து மின் துறை அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார்.
“தமிழ்நாடு மின்சார வாரியம் தனியார் மயமாகிறது என்று சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். இந்த வதந்திகளை நம்ப வேண்டாம். தமிழ்நாடு மின்சார வாரியம் எந்த சூழலிலும் தனியார்மயமாகாது. ஊழியர்கள் பயப்பட வேண்டாம்” என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.