அரசு டாக்டர்களுக்கு 50% இடஒதுக்கீடு கிடையாது

அரசு டாக்டர்களுக்கு உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் 50 சதவீதம் உள்ஒதுக்கீட்டை நடப்பு கல்வியாண்டில் வழங்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.

அரசு டாக்டர்கள் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் சேர 50 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நாகேஸ்வராவ் தலைமையிலான அமர்வு, தமிழக அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் நோட்டீஸ் அனுப்பியது. 50 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவது தனி ஒதுக்கீடு அல்ல என்றும், உள்ஒதுக்கீட்டை பல ஆண்டுகளாக கடைபிடித்து வருவதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் அமர்வு, உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு இந்த ஆண்டு கிடையாது என்று உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *