அரசு உதவி பெறும் பள்ளி மாணவருக்கு 7.5% உள்ஒதுக்கீடு கிடையாது

அரசு உதவி பெறும் பள்ளி மாணவருக்கு 7.5% உள்ஒதுக்கீடு கிடையாது என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதுதொடர்பான மசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சிறிது காலதாமதத்துக்குப் பிறகு ஆளுநரும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கினார்.

 அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு இந்த ஆண்டு முதலே அமல் செய்யப்படுகிறது. அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் இந்த ஒதுக்கீடு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

“அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும். தனியார் மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கு இது பொருந்தாது. பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து வரும் திங்கள்கிழமை பெற்றோர், ஆசிரியர்களிடம் கருத்து கேட்கப்படும். அதன்பின்னரே பள்ளி திறப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்” என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *