மும்மொழி கொள்கைக்கு நோ ..இருமொழிக்கு ஓகே…

தமிழகத்தில் மும்மொழி கொள்கை அமல்படுத்தப்படாது. இரு மொழி கொள்கையே தொடரும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.


மத்திய அரசு அண்மையில் புதிய தேசிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் வழங்கியது. இதில் மும்மொழி கொள்கை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.


இதன்பிறகு முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் “கடந்த 80 ஆண்டுகளாக இருமொழி கொள்கையில் தமிழக மக்கள் உறுதியாக உள்ளனர். தமிழகத்தில் மும்மொழி கொள்கை அமல் செய்யப்படாது. தமிழ், ஆங்கிலம் இருமொழி கொள்கையை தொடரும்” என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.


புதிய தேசிய கல்வி கொள்கையில் 8-ம் வகுப்பு வரை பொதுத்தேர்வு, கல்லூரிகளுக்கு ஒரே நுழைவுத் தேர்வு உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக நிபுணர் குழுவை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *