சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது

சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது என்று குடிநீர் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சென்னை மாநகருக்கு பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 4 ஏரிகளிலும் 3.16 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருந்தது. 

தற்போதைய நிலவரப்படி 7 டிஎம்சி தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீரை பயன்படுத்தி 2021 ஜூன் வரை சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். எனவே சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வராது என்று சென்னை குடிநீர் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *