சென்னையில் இந்தாண்டு குடிநீர் பஞ்சம் வராது என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஒரு மாதத்துக்கு 3 டிஎம்சி தண்ணீர் தேவை. தற்போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை கண்ணன்கோட்டை நீர்த்தேக்கரங்களில் 8.1 டிஎம்சி தண்ணீர் உள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் கிருஷ்ணா நீர் சென்னைக்கு வந்து வரும். எனவே இந்த ஆண்டு குடிநீர் பஞ்சம் ஏற்படாது என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.