உணவு பார்சல் கொண்டு செல்லும் நிறுவனங்களின் ஊழியர்கள் போலீஸ் சான்றிதழ் பெற வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் அறிவித்துள்ளார்.
“உணவு பார்சல் வாகனங்கள் வாயிலாக சிலர் கஞ்சா கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே உணவு பார்சல் நிறுவனங்களில் வேலைக்கு ஆட்களை சேர்க்கும்போது அவர்கள் போலீஸாரின் நன்னடத்தை சான்றிதழ் பெற வேண்டும் என்ற புதிய நடைமுறையை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் அறிவித்துள்ளார்.