வடகிழக்கு பருவமழை குறையும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்துக்கு மழை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை காலம் விரைவில் தொடங்க உள்ளது. இப்போதே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் வடகிழக்குப் பருவமழை எவ்வாறு இருக்கும் என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் விளக்கம் அளித்துள்ளார்.
“இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பைவிட சற்று குறைவாகவே பெய்யும். குறிப்பாக தென் தமிழக மாவட்டங்களில் மழைப் பொழிவு குறைவாக இருக்கும்.
பசிபிக், இந்திய பெருங்கடலில் நிலவும் வெப்பநிலை மாறுபாட்டை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு கணிக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.