அக். 28-ல் பருவமழை தொடங்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா, ராயலசீமா, தெற்கு கர்நாடக பகுதிகளில் அக்.28-ம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கக்கூடும். வடதமிழகத்தில் இயல்பை ஒட்டியும் தென்தமிழகத்தில் இயல்பைவிட குறைவாகவும் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தற்போது பருவக் காற்று மாறுவதால் வளிமண்டல மேல், கீழ் அடுக்குகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதன்காரணமாகவே சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பெய்தது” என்று இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்ந்திரன் தெரிவித்துள்ளார்.