அக். 25-க்குப் பிறகு பருவமழை

அக். 25-க்குப் பிறகு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பசிபிக் கடலில் லானினா நிகழ்வு, நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதன்காரணமாக தமிழக பகுதிகளில் தென்மேற்கு பருவகால நிகழ்வு தொடர்கிறது.

வங்கக் கடலில் அடுத்தடுத்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி, தென்னிந்திய கடற்பகுதிக்கு வடக்கே நகர்ந்து செல்லக்கூடிய நிலை நிலவுகிறது.

இதன்காரணமாக தமிழகம், தெற்கு ஆந்திரா, தெற்கு கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் மேற்கு திசைக் காற்று அக். 22 வரை தொடர்ந்து வலுவாக இருக்க வாய்ப்புள்ளது.

எனவே தமிழகத்தில் வடக்கிழக்கு பருவமழை அக். 25-க்குப் பிறகு தொடங்கலாம்” என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *