பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு நோட்டீஸ்

பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

திடக்கழிவு மேலாண்மையை செயல்படுத்தாத பிளிப்கார்ட் நிறுவனத்தின் மீது தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. 

இந்த வழக்கில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

“சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் பிளிப்கார்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 

அந்த நிறுவனத்திடம் விளக்கும் கேட்டும், மூடுவதற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் நோட்டீஸுக்கு இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.

இந்துஸ்தான் கோககோலா பீவரேஜ், பெப்சிகோ இந்தியா ஹோல்டிங்ஸ், நவ்ரிஷ் கோ பீவரேஜஸ், பிஸ்லரி இன்டர்நேஷனல் ஆகிய 4 நிறுவனங்களும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் பதிவு செய்துள்ளன.

அமேசான் செல்லர் சர்வீசஸ், கோககோலா இந்தியா, பார்லே அக்ரோ, ஐஆர்சிடிசி ஆகியவை பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகளின்படி பதிவு செய்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பாயத்தின் உத்தரவுபடி மேற்கண்ட நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்கள் காலாண்டு இடைவெளியில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். 

இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்” என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *