மின் வாரிய தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தாம்பரம் அடுத்த சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் வரதன். இவரது மூத்த மகன் கவுதம் (வயது 8), பீர்க்கன்கரணை பேரூராட்சி பூங்காவில் கடந்த 2-ம் தேதி விளையாடி கொண்டிருந்தான். அப்போது பூங்காவில் உள்ள மின் விளக்கை கவுதம் தொட்டபோது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தான்.
இதுதொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக மின் வாரிய தலைவர், பேரூராட்சி இயக்குநர் ஆகியோர் 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணைய தலைவர் நீதிபதி துரை ஜெயச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.