கொளத்தூர் ஏரி ஆக்கிரமிப்புகள் ஓராண்டுக்குள் அகற்றப்படும்

சென்னை கொளத்தூர் ஏரி ஆக்கிரமிப்பு குறித்து வெளியான நாளிதழ் செய்தியை அடிப்படையாக கொண்டு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

கொளத்தூர் ஏரி குறித்து ஆய்வு மேற்கொள்ள திருவள்ளூர் ஆட்சியர், மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார துறை, சென்னை குடிநீர் வாரியம், சிஎம்டிஏ, சென்னை மாநகராட்சியின் மூத்த அதிகாரிகள், அண்ணா பல்கலைக்கழக நீரியல் பேராசிரியர் ஆகியோர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதித்துறை உறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் சத்யகோபால் அமர்வு முன்பு அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு குழு சார்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

கொளத்தூர் ஏரியில் கழிவுநீர் கலப்பதை 3 மாதங்களுக்குள் தடுக்க சென்னை மாநகராட்சி, சென்னை குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுக்க உள்ளது.

ஏரியின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக நோட்டீஸ் வழங்குமாறு வருவாய் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்குள் கணக்கெடுப்பு நடத்தி ஓராண்டுக்குள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *