உயர்ரக பைக், கார்களுக்கான பிரிமியம் கிரேடு பெட்ரோல் விற்பனை தொடங்கியுள்ளது.
உயர்ரக பைக், கார்களுக்கு பயன்படுத்தப்படும் பிரிமியம் கிரேடு பெட்ரோலை (100 ஆக்ட்டேன்) இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த பெட்ரோல் விற்பனையை மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார்.
முதல்கட்டமாக டெல்லி, குர்காவ்ன், நொய்டா, ஆக்ரா, ஜெய்ப்பூர், சண்டிகர், லூதியாணா, மும்பை, புனே, அகமதாபாத் ஆகிய 10 நகரங்களில் பிரிமியம் கிரேடு பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது. படிப்படியாக நாட்டின் இதர நகரங்களிலும் பிரிமியம் கிரேடு பெட்ரோல் விற்பனை தொடங்கும் என்று இந்தியன் ஆயில் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த வகை பெட்ரோல் அமெரிக்கா, ஜெர்மனி, கிரீஸ், இந்தோனேசியா, மலேசியா, இஸ்ரேல் நாடுகளில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இந்த வரிசையில் 7-வது நாடாக இந்தியா இணைந்துள்ளது.