பழைய பஸ் பாஸ் 15-ம் தேதி வரை செல்லும்

பழைய பஸ் பாஸ் 15-ம் தேதி வரை செல்லும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை முதல் மாவட்டங்களுக்குள் அரசு பஸ் சேவை இயக்கப்படுகிறது.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறும்போது, “அரசு பஸ்கள் இரவு 9 மணி வரை இயக்கப்படும்.

புதன்கிழமை முதல் புதிய பஸ் பாஸ்கள் வழங்கப்படும். பழைய பாஸ்கள் இம்மாதம் 15-ம் தேதி வரை செல்லும். அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்படாது. மாவட்டங்களுக்கு இடையே பஸ்களை இயக்குவது குறித்து முதல்வர் முடிவு செய்வார்” என்று தெரிவித்தார்.

சென்னை மெட்ரோ ரயில் சேவை

நாடு முழுவதும் செப். 7 முதல் மெட்ரோ ரயில் சேவைகளை தொடங்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி சென்னையில் வரும் 7-ம் தேதி மெட்ரோ ரயில் சேவை தொடங்குகிறது.

இதற்கான வழிகாட்டு நெறிகள் வரும் 5-ம் தேதி வெளியிடப்பட உள்ளன. டோக்கன் கட்டண முறை ரத்து செய்யப்படும் என்றும் அதற்குப் பதிலாக ஸ்மார்ட் கார்டு, கியூஆர் கோடு முறை அறிமுகம் செய்யப்படும் என்று மெட்ரோ ரயில் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

118 அவசர கால வாகனங்கள்

கொரோனா நோயாளிகளை மருத்துவமனை அழைத்துச் செல்வதற்காக 90 ஆம்புலன்கள் மற்றும் ரத்த வங்கி வாகனம் உட்பட 118 அவசர கால வாகனங்களின் சேவையை முதல்வர் பழனிசாமி கடந்த திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.

நாட்டிலேயே முதல்முறையாக ஆம்புலன்ஸ் டிரைவராக வீரலட்சுமி என்ற பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்தான் நாட்டின் முதல் ஆம்புலன்ஸ் பைலட் ஆவார்.

இந்திய தேர்தல் ஆணையர்

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக சுனில் அரோரோ பதவி வகிக்கிறார். தேர்தல் ஆணையர்களாக சுசில் சந்திராவும் அசோக் லாவசாவும் பணியாற்றி வந்தனர்.

இதில் அசோக் லாவசா அண்மையில் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து புதிய தேர்தல் ஆணையார ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டார். அவர் கடந்த செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *