தந்தையை கைவிட்ட மகன்கள்.. ரூ.1 கோடி சொத்து பரிமாற்றம் ரத்து…

தந்தையை கைவிட்ட மகன்கள்.. ரூ.1 கோடி சொத்து பரிமாற்றம் ரத்து… செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், பொன்னை கிராமத்தை சேர்ந்தவர் ரேணு கோபால் (வயது 82). இவருக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.

வயது முதுமை காரணமாக தனக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான சொத்துகளை 3 மகன்களுக்கும் ரேணு கோபால் பத்திரப் பதிவு செய்து கொடுத்துள்ளார். ஆனால் 3 மகன்களும் தந்தைக்கு சரிவர உணவு கொடுக்காமல் துன்புறுத்தி வந்துள்ளார்.

இதுதொடர்பாக வேலூர் வருவாய் கோட்டாட்சியரிடம் ரேணு கோபால் புகார் மனு அளித்தார். இதனை விசாரித்த கோட்டாட்சியர் கணேஷ், புகார் மனுவின் உண்மைத்தன்மையை உறுதி செய்தார். இதைத் தொடர்ந்து ரூ. 1 கோடி மதிப்பிலான சொத்துகளின் பத்திரங்களை ரத்து செய்த கணேஷ், அவற்றை ரேணுகோபால் பெயரில் மாற்ற உத்தரவிட்டார். பெயர் மாற்றம் செய்யப்பட்ட சொத்து பத்திரங்கள் ரேணு கோபாலிடம் கடந்த வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *