பிஹாரில் பசுவை பலாத்காரம் செய்த 55 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிஹார் மாநிலம் சுந்தர் நகரில் பல்வேறு மாட்டுப் பண்ணைகள் செயல்படுகின்றன. இங்குள்ள முக்கிய பகுதிகளில் போலீஸ் தரப்பில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்களின் பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தபோது அதிர்ச்சியான வீடியோவை பார்த்தனர்.
கடந்த 4-ம் தேதி ஒரு முதியவர் அங்குள்ள மாட்டுப் பண்ணைக்குள் நுழைந்து பசுவுடன் பாலியல்ரீதியாக உறவு கொண்டார். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “சிசிடிவி வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் சபீர் அலி (55) என்பவரை கைது செய்துள்ளோம். அவர் மீது சட்டப்பிரிவு 377-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மத்திய பிரதேசம் குணா மாவட்டத்தில் சமர் கான் என்பவர் பசுவுடன் தகாத உறவு கொண்டதாக கைது செய்யப்பட்டார். வடமாநிலங்களில் இத்தகைய கொடூரங்கள் அதிகரித்து வருவது கவலையளிப்பதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.