போலீஸ் அருங்காட்சியமாக மாறுகிறது பழைய கமிஷனர் அலுவலகம்

சென்னை எழும்பூரில் பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகம் உள்ளது. இது 178 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கட்டிடம் ஒரு காலத்தில் பண்ணை வீடாக இருந்தது. கடந்த 1842-ம் ஆண்டில் அருணகிரி முதலியார் என்பவர் பண்ணை வீட்டை வாங்கினார்.

கடந்த 1856-ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் கால போலீஸ் கமிஷனர் போல்டர், பண்ணை வீட்டை போலீஸ் கமிஷனர் அலுவலகமாக மாற்றினார். இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு 6 மாடிகள் கொண்ட புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை கட்ட முன்னாள் போலீஸ் கமிஷனர் காளிமுத்து முயற்சி செய்தார். ஆனால் பழங்கால கட்டிடத்தை இடிக்க எதிர்ப்பு கிளம்பியதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

தற்போது வேப்பேரியில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் செயல்படுகிறது. எனவே எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை, போலீஸ் அருங்காட்சியமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள பழமை மாறாமல் ரூ.4 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. அடுத்த 3 மாதங்களில் அருங்காட்சியகம் தயாராகிவிடும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *