தலையில் பால் டம்ளர்.. சிந்தாமல், சிதறாமல் நீந்தும் ஒலிம்பிக் வீராங்கனை…

அமெரிக்காவை சேர்ந்த பிரபல நீச்சல் வீராங்கனை கேத்தி லெடக்கி. இவர் கடந்த 2012 ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் ஒரு தங்க பதக்கமும் 2016 ஒலிம்பிக் போட்டியில் 4 தங்க பதக்கங்களையும் வென்று சாதனை படைத்தார்.


கடந்த ஜூலையில் ஜப்பானில் நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா வைரஸால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எப்போது ஒலிம்பிக் போட்டி நடைபெறும் என்பதில் நிச்சயமற்றதன்மை நீடிக்கிறது.எனினும் அமெரிக்கா, ரஷ்யா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிக்காக தொடர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


அமெரிக்க நீச்சல் வீராங்கனை கேத்தி லெடக்கி, வழக்கமான நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அண்மையில் அவர் ஒரு சாதனையை படைத்து அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.


தலையில் சாக்லேட் பால் டம்ளரை வைத்து கொண்டு ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு அவர் அழகாக நீந்தி செல்கிறார். தலையில் உள்ள டம்ளர் ஆடாமல் அசையாமலும், சாக்லேட் பால் சிந்தாமல் சிதறாமலும் அவர் நீச்சல் அடித்து செல்கிறார். மறுமுனைக்கு சென்றதும் ஹாயாக சாக்லேட் பாலை குடிக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *