அக்.16 முதல் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது.
கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் பஸ்களை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது.
ஆனால் வரி விவகாரத்தால் ஆம்னி பஸ்கள் இயக்கப்படவில்லை. அரசு விரைவு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அக். 16 சனிக்கிழமை முதல் தமிழக பதிவு எண் கொண்ட 950 பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக அனைத்து ஆம்னி பஸ்களின் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
குளிர்சாதன வசதியுடன்கூடிய ஆம்னி பஸ்களும் இயக்கப்பட உள்ளன.