புயல் முன்னெச்சரிக்கையாக ரயில்கள், ஆம்னி பஸ்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் பஸ் போக்குவரத்துக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
மறுஉத்தரவு வரும்வரை இந்த மாவட்டங்களில் தடை நீடிக்கும். இதைத் தொடர்ந்து மேற்கண்ட 7 மாவட்டங்களில் ஆம்னி பஸ்களின் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.
புயல் காரணமாக நவம்பர் 25-ம் தேதி தென்மாவட்டங்களுக்கான அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
முன்பதிவு செய்த பயணிகளுக்கான கட்டணம் திருப்பி வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே உறுதி அளித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 24 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் புறநகர் மின்சார சிறப்பு ரயில்களும் புதன்கிழமை காலை 10 மணி முதல் இயக்கப்படாது.
மறுஉத்தரவு வரும் வரை தடை நீடிக்கும் என்று சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் வழக்கம்போல இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.