நாடாளுமன்றத்துக்கு ஒரே சேனல் உருவாக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகள் உள்ளன. மக்களவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு லோக்சபா டிவியும், மாநிலங்களவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு ராஜ்யசபா டிவியும் செயல்பட்டு வந்தன.
இந்நிலையில் இரு சேனல்களையும் ஒருங்கிணைத்து சன்சாத் என்ற பெயரில் ஒரே சேனல் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரவி கபூர் நியமிக்கப்பட்டுள்ளார்.