முகக்கவசம் அணியவில்லையா.. இதுவரை ரூ.1 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் பேட்டி அளித்தார்.
“தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை 92 சதவீதமாக உயர்ந்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு 10 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது.
கோவை, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது.
முகக்கவசம் அணியாதோரிடம் இருந்து 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில் இதுவரை 30 ஆயிரம் பேரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
இறப்பு எண்ணிக்கை தினமும் 120 ஆக பதிவாகி வந்த நிலையில் தற்போது 60 ஆகக் குறைந்துள்ளது” என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.