தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,993 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழக சுகாதாரத் துறை சார்பில் நாள்தோறும் மாலையில் கொரோனா வைரஸ் குறித்த புள்ளிவிவரம் வெளியிடப்படுகிறது. இன்று மாலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 6,9993 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 20 ஆயிரத்து 716 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 249 பேர் குணமடைந்துள்ளனர். 54 ஆயிரத்து 896 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மாவட்டவாரியாக சென்னையில் இன்று புதிதாக 1,138 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. திருவள்ளூரில் 474, செங்கல்பட்டில் 448, காஞ்சிபுரத்தில் 362, தூத்துக்குடியில் 349, விருதுநகரில் 338, கோவையில் 313, மதுரையில் 249 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக 95 ஆயிரத்து 857 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 80 ஆயிரத்து 761 பேர் குணமடைந்துள்ளனர். சென்னைக்கு அடுத்து செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, காஞ்சிபுரம், மதுரை மாவட்டங்களில் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.