ஒரே நாளில் 92,605 பேருக்கு கொரோனா…

ஒரே நாளில் 92,605 பேருக்கு கொரோனா… வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

உலகளாவிய கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் நாள்தோறும் 35 ஆயிரம் முதல் 45 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்படுகிறது.

அமெரிக்கா முழுவதும் 69 லட்சத்து 67 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 42 லட்சத்து 23 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். 25 லட்சத்து 39 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 2 லட்சத்து 3 ஆயிரத்து 824 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளாவிய கொரோனா வைரஸ் பாதிப்பில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் நாள்தோறும் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது.

மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் நாடு முழுவதும் ஒரே நாளில் 92 ஆயிரத்து 605 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்படுகிறது.

இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 54 லட்சத்து 620 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 43 லட்சத்து 3 ஆயிரத்து 44 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனைகளில் 10 லட்சத்து 10 ஆயிரத்து 824 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று ஒரே நாளில் 1,133 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 86 ஆயிரத்து 752 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸின் பிறப்பிடமான சீனாவில் 139 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.

அந்த நாட்டில் நாள்தோறும் 10 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுகிறது. சீனால் இயல்பு வாழ்க்கை முழுமையாக திரும்பிவிட்டது.

இதேபோல இந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா வைரஸின் மையப்புள்ளியாக இருந்த தென்கொரியாவில் எவ்வித ஊரடங்கும் அமல் செய்யப்படாமல் வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நாட்டில் நாள்தோறும் சுமார் 80 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்படுகிறது.

கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்படுகிறது.

குட்டி நாடான இஸ்ரேலில் வைரஸ் தொற்று அதிகரித்ததால் அந்த நாட்டில் 2-வது முறையாக கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது.

அண்டை நாடான இலங்கையில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு கடந்த ஆகஸ்டில் நாடாளுமன்ற தேர்தல் கூட நடத்தப்பட்டுவிட்டது. இதர அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசத்தில்கூட வைரஸ் தொற்று இறங்குமுகமாக உள்ளது.

ஆனால் இந்தியாவில் மட்டும் புதிய வைரஸ் தொற்று ஒரு லட்சத்தை எட்டிப் பிடிக்க எகிறி குதிக்கிறது.

கொரோனாவால் எழுந்துள்ள நெருக்கடியால் நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் வேலையிழந்து பரிதவிக்கின்றனர். இந்த வைரஸ் பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் முற்றுப்புள்ளி வைக்க திறம்பட செயல்பட வேண்டும்.

தனியார் நிறுவனங்கள், ஊழியர்களை பணி நீக்கம் செய்வதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *