இந்தியாவில் 93,337 பேர்.. தமிழகத்தில் 5,569 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் 93,337 பேர்.. தமிழகத்தில் 5,569 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில் ஒரே நாளில் 93 ஆயிரத்து 337 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 53 லட்சத்து 8 ஆயிரத்து 14 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 42 ஆயிரத்து 8 ஆயிரத்து 431 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 95 ஆயிரத்து 880 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 79.28 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மருத்துவமனைகளில் 10 லட்சத்து 13 ஆயிரத்து 964 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 1,247 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 85 ஆயிரத்து 619 ஆக உயர்ந்துள்ளது.

தேசிய அளவிலான வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் நேற்று 21 ஆயிரத்து 656 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது.

அந்த மாநிலத்தில் 11 லட்சத்து 67 ஆயிரத்து 496 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8 லட்சத்து 34 ஆயிரத்து 432 பேர் குணமடைந்துள்ளனர். 3 லட்சத்து ஆயிரத்து 273 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 440 பேர் உயிரிழந்தனர்.

ஒட்டுமொத்த உயிரிழப்பு 31 ஆயிரத்து 791 ஆக அதிகரித்துள்ளது.
2-வது இடத்தில் உள்ள கர்நாடகாவில் நேற்று 8 ஆயிரத்து 626 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அங்கு 5 லட்சத்து 2 ஆயிரத்து 982 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 3 லட்சத்து 94 ஆயிர்தது 26 பேர் குணமடைந்துள்ளனர். ஒரு லட்சத்து ஆயிரத்து 148 பேர் சிகிச்சையில் உள்ளனர். 7 ஆயிரத்து 808 பேர் உயிரிழந்துள்ளனர்.

3-வது இடத்தில் உள்ள ஆந்திராவில் புதிதாக 8 ஆயிரத்து 96 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 6 லட்சத்து 9 ஆயிரத்து 558 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 5 லட்சத்து 19 ஆயிரத்து 891 பேர் குணடைந்துள்ளனர். 84 ஆயிரத்து 423 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 ஆயிரத்து 244 பேர் உயிரிழந்துள்ளனர்.

4-வது இடத்தில் உள்ள உத்தர பிரதேசத்தில் நேற்று 6 ஆயிரத்து 494 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. மாநிலத்தில் 3 லட்சத்து 42 ஆயிரத்து 788 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2 லட்சத்து 70 ஆயிரத்து 94 பேர் குணமடைந்துள்ளனர். 67 ஆயிரத்து 825 பேர் சிகிச்சையில் உள்ளனர். 4 ஆயிரத்து 869 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஐந்தாவது இடத்தில் உள்ள தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 5 லட்சத்து 36 ஆயிரத்து 477 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதில் 4 லட்சத்து 81 ஆயிரத்து 273 பேர் குணமடைந்துள்ளனர். 46 ஆயிரத்து 453 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 66 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 8 ஆயிரத்து 751 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 987 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கோவையில் 565 பேர், செங்கல்பட்டில் 293 பேர், கடலூரில் 289 பேர், சேலத்தில் 286 பேர், திருவள்ளூரில் 282 பேர், காஞ்சிபுரத்தில் 175 பேர், ஈரோட்டில் 166 பேர், திருப்பூரில் 163 பேர், திருவண்ணாமலையில் 160 பேர், தஞ்சாவூரில் 151 பேர், வேலூரில் 146 பேர், விழுப்புரத்தில் 144 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் இன்று 4 ஆயிரத்து 644 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 25 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 92 ஆயிரத்து 951 பேர் குணமடைந்துள்ளனர். 37 ஆயிரத்து 488 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 519 பேர் உயிரிழந்துள்ளனர்.

சத்தீஸ்கரில் 36,580 பேர், ஒடிசாவில் 33,092 பேர், டெல்லியில் 32,250 பேர், தெலங்கானாவில் 30,636 பேர், அசாமில் 28,631 பேர், மேற்குவங்கத்தில் 24,509 பேர், பஞ்சாபில் 21,662 பேர், மத்திய பிரதேசத்தில் 21,605 பேர், ஹரியாணாவில் 21,291 பேர், காஷ்மீரில் 20,770 பேர், ராஜஸ்தானில் 17,717 பேர், குஜராத்தில் 16,076 பேர், ஜார்க்கண்டில் 13,924 பேர், பிஹாரில் 12,609 பேர், உத்தராகண்டில் 11,293 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *