புதிய உச்சம் தொட்டது.. ஒரே நாளில் 4.14 லட்சம் பேருக்கு கொரோனா…

புதிய உச்சம் தொட்டது.. ஒரே நாளில் 4.14 லட்சம் பேருக்கு கொரோனா… தொற்று ஏற்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத் துறையின் நேற்றைய புள்ளிவிவரத்தின்படி 4 லட்சத்து 14 ஆயிரத்து 188 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 2.14 கோடி பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே நாளில் 3.31 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 1.76 லட்சம் பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதும் மருத்துவமனைகள், கொரோனா மையங்கள், வீடுகளில் 36.45 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒரே நாளில் 3,915 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களையும் சேர்த்து ஒட்டுமொத்த உயிரிழப்பு 2.34 லட்சமாக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *