கொரோனா; வறுமை – ஒரே குடும்பத்தில் மூன்று பேர் தற்கொலை

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்தவர் டில்லி. 74 வயதாகும் இவர் விவசாய கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு மல்லிகேஸ்வரி என்ற மனைவியும் நாகேஸ்வரி என்ற மகளும் உள்ளனர். நாகேஸ்வரிக்கு திருமணமாகி அவர் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இவர்கள் மூன்று பேருக்கும் கடந்த சில தினங்களாக காய்ச்சல் இருந்து வந்திருக்கிறது. அதற்கு அருகில் உள்ள மெடிக்கல்லில் மருந்து மாத்திரைகளை வாங்கிச் சாப்பிட்டு வந்திருக்கின்றனர். ஆனாலும் குணமடையவில்லை. மருத்துவமனைக்குச் செல்லவும் வசதியில்லை. கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானமின்றி டில்லியின் குடும்பம் சிரமமபட்டு வந்திருக்கிறது.

மல்லிகேஸ்வரியின் சகோதரர்தான் டில்லி குடும்பத்துக்கு உதவி செய்து வந்திருக்கிறார். வறுமை, காய்ச்சல் ஆகியவற்றால் மனமுடைந்த மூன்று பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி நேற்றிரவு ஒரே அறையில் மூன்று பேரும் தனித்தனியாக புடவையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். கதவு நீண்டநேரமாக திறக்கப்படாததால் சந்தேகமடைந்த மல்லிகேஸ்வரியின் சகோதரர் உள்ளே எட்டிப்பார்த்தார். அப்போது மூன்று பேரும் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீஸார் வழக்கு பதிவு செய்துவிசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *