ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் நிறுத்தப்படவில்லை

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் நிறுத்தப்படவில்லை என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த 1-ம் தேதி முதல் தமிழகத்தில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமலில் உள்ளது. இதன்படி பயோமெட்ரிக் அடிப்படையில் ரேஷனில் பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் காலதாமதம், குழப்பங்கள் ஏற்பட்டதால் பயோமெட்ரிக் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. பழையபடி ஸ்மார்ட் ரேஷன் அட்டையை ஸ்கேன் செய்து பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இதுகுறித்து தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

“தமிழகத்தில் பயோமெட்ரிக் முறை மட்டுமே தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் நிறுத்தப்படவில்லை” என்று அமைச்சர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *