லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியருக்கு சிறை

லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அடையாறு கஸ்தூரிபா நகரை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் கடந்த 2011-ம் ஆண்டில் தனது வீட்டின் ஒருமுனை மின்சாரத்தை மும்முனை மின்சாரமாக மாற்ற மின் வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இதற்கு மின்வாரிய மதிப்பீட்டாளர் நாகலிங்கம் ரூ.10,000 லஞ்சம் கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸில் இளங்கோவன் புகார் செய்தார். அவர்களின் அறிவுரைபடி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகலை நாகலிங்கத்திடம் இளங்கோவன் வழங்கினார். அப்போது நாகலிங்கத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. நாகலிங்கம் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி ஓம்பிரகாஷ் தீர்ப்பளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *