சிற்ப, இசை, பிஎட் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

மாமல்லபுரத்தில் இயங்கும் அரசு கட்டிட கலை, சிற்ப கல்லூரியில் பிடெக், பிஎப்ஏ படிப்புகளில் சேரவும், சென்னை, கோவை, மதுரை, திருவையாறில் இயங்கும் அரசு இசைக் கல்லூரிகளில் சேரவும் ஆகஸ்ட் 17-ம் தேதி வரை www.artandculture.tn.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று கலை, பண்பாட்டுத் துறை அறிவித்துள்ளது.

இதேபோல காந்தி கிராம் பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைந்த 4 ஆண்டு பிஎஸ்சி, பிஎட் படிப்பில் சேர வரும் ஆகஸ்ட் 17-ம் தேதிக்குள் www.ruraluniv.ac.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தேர்வு இல்லாமல் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *