முதுகலை பட்டப்படிப்பு.. இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இணையம் வாயிலாக மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து முதுகலை படிப்புகளுக்கும் இணையத்தில் விண்ணப்பிக்கும் நடைமுறை தொடங்கியுள்ளது.
இதன்படி தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பில் சேர அக்டோபர் 10 முதல் 20-ம் தேதி வரை www.tngasapg.in மற்றும் www.tngasapg.org இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.
இதில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் 044- 22351014, 044- 22351015, 044- 28276791 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் அறிவித்துள்ளார்.